கீரைகள்...

யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு தகவல்... கீரைகள்... அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள். எப்படி??? காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை. பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான். மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே. கீரைகளில் சில..... 1. பொன்னாங்கண்ணி கீரை 2. ஆரைக் கீரை 3. குறிஞ்சாக் கீரை 4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை 5. முசுட்டை கீரை 6. குமுட்டி கீரை 7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை 8. முருங்கை கீரை 9. ...